பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியம்

402 0

பிரித்தானியாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு வடமேற்கு பிராந்தியத்தில் ( St Andrews church,Marlven avenue,harrow, HA2 9ER) நடைபெற்றது.

மண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும் போற்றி மதிப்பளிக்கும் வைபவம் தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளிலும்ஒவ்வொரு வருடமும் மாவீரர் வார தொடக்கத்தில் இடம் பெற்று வரும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வுதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் முதல் நிகழ்வாக ஈகைச்சுடரினை முல்லைத்தீவு ஓயாத அலைகள் 1 ல் 1996 ஜூலை 18 ல் மாவீரர் கப்டன் தமிழேந்தியின் தந்தையாகிய ஆறுமுகம் குமாரசாமி அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை லெப் கேணல் மனோஜ் அவர்களின் சகோதரன் கமலநாதன் ஏற்றி வைத்தார் . கல்லறைக்கான மலர் மாலையினை குட்டி என்றழைக்கப்படும் மாவீரர் ஜெஸ்டின் செல்வகுமாரின் தயார் ரீட்டா செல்வகுமார் அணிவித்தார் தொடர்ந்து தாயாக கானங்கள் , கவிதைகள், மாவீரர் நினைவு சுமந்த உரைகள் இடம்பெற்றன அத்துடன் மாவீரர் கணங்களுக்கான பின்னணி இசை இறுவெட்டு வெளியிடப் பட்டது தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர் கனவை நிறைவேற்றுவோம் என்கின்ற உறுதி மொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது.

Leave a comment