தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

310 0
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது.
தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம்.
அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உள்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

Leave a comment