முறி மோசடி தொடர்பில் சுனில் ஹந்துன்நெத்தி கருத்து

352 0
முறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்களுக்கு அர்ஜூன் அலோசியஸ் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தால் அதனை அவர்கள் மக்களுக்கு கூறியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்குரெஸ்ஸையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்தார்.
புத்தகம் எழுதுவதற்காகவே அலோசியஸூடன் தொடர்புகளை ஏறபடுத்தியதாக ஒருவர் கூறுகின்றார்.
புத்தகம் 2015 இல் எழுதப்பட்டது.
2016 இல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கோப் குழு விசாரணையில் தாமே தலைவராக செயற்பட்ட நிலையில், தமக்கு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.
அவ்வாறில்லையெனில், ஜே.வி.பி யின் ஏனைய கோப் குழு உறுப்பினர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்க முடியும்.
அவ்வாறு எந்த தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை.
அவ்வாறு தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அன்றைய தினமே கோப் குழு அறிக்கையில் அர்ஜூன் அலோசியஸ் திருடன் என்பதை எழுதியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment