எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலை உத்தேச அரசியல் அமைப்பிற்கு எதிரான மக்கள் கருத்துக் கணிப்பாக பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிசாவலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் நூற்றுக்கு ஐம்பத்தைந்து சதவீத வெற்றி போன்ற வெற்றிகள் தேவையில்லை.
இந்த தேர்தல் தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்க தேவையில்லை என்ற மக்களின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பம் நழுவவிடப்பட்டால் பிரிவினைவாத அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்படும் என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.