ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பவற்றின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பு நேற்று (25) மாலை கண்டியில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கலந்துரையாடலின் இறுதியில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.