UNP – TNA யுடன் இணைந்து புதிய அரசாங்கம் !- ஐ.தே.க. மறுப்பு

283 0

தமிழ் தேசியக் கூட்டணியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஸ்ரீ ல.சு.கட்சி எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியுடன் கூட்டுச் சேர்ந்தால், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்னவிடம் வினவிய போதே அவர் இதனை மறுத்துள்ளார்.

“ அப்படியொன்றும் இல்லை. இவையெல்லாம் ஒவ்வொருவரும் இணைந்து உருவாக்கியுள்ள வாய்ப் பேச்சுக்கள். அவர்கள் அரசாங்கம் அமைக்க ஒன்று சேர்வதுமில்லை. அதற்காக எந்தவிதப் பேச்சுவார்த்தையும் நடக்கவும் இல்லை. இதுவரையில் கூட்டரசாங்கத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுகள் பல தடவைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எதிர்வரும் காலங்களிலும் எந்தவகையான விடயங்களுக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து அக்கட்சியே தீர்மானிக்கும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment