சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார் என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம்!

386 0

ஒருமித்த நாட்டுக்குள்  எமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வினைப் பெறுவதற்கு தயார்  என்பதை நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். அதற்கு பின்னால் எமது மக்கள் நிற்கின்றார்கள் என்பதை வருகின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் மூலமாக நாங்கள் ஊர்ஜிதப்படுத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்திரய பிரதமர் ரஜீவ்காந்தி இறந்திருக்காவிட்டால் அவருடைய காலத்தில் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தெளிவூட்டல் கருத்தரங்கு நேற்று மட்டக்களப்பு பேடினன்ட் மண்டபத்திலர் நடைபெற்றது இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment