தமிழகம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: பலத்த மழைக்கு வாய்ப்பு

342 0

புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் அருகே தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இந்திய பெருங்கடல் வரை மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களிலும் வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. அடுத்த 38 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே வருகிற 29-ந்தேதி தென்கிழக்கு வங்க கடலில் தமிழகம், இலங்கையையொட்டியுள்ள பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று அதிகாலையில் லேசாக மழை தூறியது. அதன்பிறகு காலை முதல் மழை சற்று வலுத்து பெய்து வருகிறது. சென்னை புறகர் பகுதியிலும் செங்கல்பட்டிலும் மழை பெய்தது.

Leave a comment