அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் என்ன வகையான நடவடிக்கையை முன்னெடுக்கின்றன என்பதை தான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை அநீதியானது என ஐ.தே.கட்சியோ அல்லது வேறு கட்சிகளோ கருத்துத் தெரிவிப்பதாயின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் அனைத்தையும் சபாநாயகர் கணக்கில் எடுக்காமல் விட்டுவிட்டதாகவும், இருப்பினும், இந்தப் பிரேரணையை அவர் கருத்தில் கொள்வார் என தான் நம்புவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.