50 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்படவுள்ள பண்ணை உல்லாசக் கடற்கரை பகுதி

332 0
நகர அபிவிருத்தி அதிகார சபையின் 50 மில்லியன் ரூபா செலவில் பண்ணை உல்லாசக் கடற்கரைப் பகுதி விஸ்தரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜ.கே.குணதிலக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் தமது நேரத்தை பிரயோசனமாகவும் இலகு நடைப்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வசதியாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் 18 மில்லியன் ரூபா செலவில் பண்ணையில் உல்லாசக் கடற்கரை அமைக்கப்பட்டு யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடற்கரையின் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி மேலும் 50 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இவற்றில் ஒரு கிலோமீற்றர் நீளமான நடைபாதை மற்றும் ஓய்வு இருக்கைகள் என்பன அமைக்கப்படவுள்ளன. இதனூடாக மக்கள் குறித்த உல்லாசக் கடற்கரையினை பிரயோசனமுள்ளதாக பயன்படுத்த வழியேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment