சரியான நடைமுறைகளை பின்பற்றாது வீதி பேரூந்து போக்குவரத்து அனுமதி

393 0

மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் சரியான நடைமுறைகளை பின்பற்றாது வீதி பேரூந்து போக்குவரத்து அனுமதி பத்திரங்களை வழங்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனியார் பேரூந்து உரிமையாளர்க சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்தின இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பேரூந்துகளின் அவசியம் தொடர்பில் எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பேரூந்து போக்குவரத்து துறை மேலும் நெருக்கடிகளுக்கு உட்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறு எனினும் 102 பேரூந்துகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்கு கேள்வி பத்திரம் கோரப்பட்டுள்ளதுடன், அந்த செயற்பாடுகள் உரிய நடைமுறைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a comment