தொடரூந்து பாதையில் செல்ஃபி எனப்படும் சுயப்படம் எடுப்பதற்கு முயன்ற காரணத்தினால் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த நிலைமையை எதிர்காலத்தில் குறைத்து கொள்ளும் பொருட்டு பரந்தளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம் என அந்த சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இந்த வருடத்துக்குள் மாத்திரம் சுயப்படம் எடுக்க முயன்ற 24 இளைஞர் யுவதிகள் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்காதிருக்க உரிய நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.