வடக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன விசேட அவதானம் செலுத்தியுள் ளார். மாதாந்தம் முப்படையினரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றன.
இதன்படி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெற்றிகரமான பாதையை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கின்றன. அத்துடன் மலையகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தியதன் பின்னரே நான் காணி அமைச்சராக பொறுப்பேற்றேன். இதுபோன்று காணி விடயத் தில் காணப்படும் பிரச்சினைகளையும் தீர்ப்பேன்.
2020 ஆம் ஆண்டாகும் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் காணி உரித்து இல்லாதவர்களுக்கு உரித்துரிமையை வழங்குவோம். நாடுபூராகவும் 12 மில்லியன் காணி துண்டுகள் உள்ளன. இதன்போது நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வருவதன் மூலம் காணிகளை இனங்காண்பது இலகுவாகும். இதன் ஊடாக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு காணிகளை வழங்க முடியும். மேலும் மறைக்கப்பட்டுள்ள அரச காணிகளை இனங்காணவும் முடியும்.
நில அளவையாளர்களின் சேவை மிகவும் அளப்பரியதாகும். அபிவிருத்திக்கான அடித்தளத்தை நில அளவையாளர்களே முன்னெடுக்கின்ற னர். இதன்படி எமது அரசாங்கத்தின் பிரதான அபிவிருத்தி திட்டங்களான மொரகஹகந்த, மத்திய அதிவேகப் பாதை, கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை போன்றவற்றிற்கான நில அளவைகளை பூரணமாக முடித்துள்ளோம். உள்ளூராட்சி மன்ற தேர் தலுக்கான எல்லை நிர்ணய அளவைகளையும் முழுமையாக முடித்துள்ளோம். இதன்படி தேர்தலை இலகுவாக நடத்த முடியும். நான்கு மாதத்தில் அதிகளவிலான காணி உரித்துரிமைகளை வழங்கியுள்ளோம்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான காணிகளை இலகுவாகப் பெற்றுக்கொடுக்க கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் காப்புறுதி தொட ர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கவுள்ளோம்.
பொதுநலவாய சங்கத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றம் தொடர்பில் குற்றம் சுமத்தினாலும் இலங்கை பாராளுமன்றம் சரியாக செயற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வை வரியற்ற வாகனங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன.
மேலும் மலையகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
வடக்கில் காணிகள் விடுவிக்கப்படு வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன விசேட அவதானம் செலுத்தியுள்ளார். மாதாந்தம் முப்படையி னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படு கின்றன. இதன்படி வடக்கு காணி விடு விப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெற் றிகரமான பாதையை நோக்கி பயணிக்கின் றன. மேலும் வடக்கில் காணி நடமாடும் சேவையையும் நடத்தவுள்ளோம் என்றார்.