நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதால் தேர்­தலை நடத்த முடி­யாது : ல­க் ஷ்மன் கிரி­யெல்ல

344 0

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல சபை யில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் காணி, வன ஜீவ­ரா­சிகள் அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போது தினேஷ் குண­வர்­தன தேர்தல் விவ­காரம் தொடர்பில் கருத்து தெரி­வித்­ததை அடுத்தே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

தினேஷ் குண­வர்­தன குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் வேண்டும் என்றே தேர்­தலை தொடர்ந்து தாமதம் செய்து வரு­கின்­றது. இவ்­வாறு ஜன­நா­யக அடிப்­ப­டையில் தேர்­தலை தாமதம் செய்­வது முர­ணான செயற்­பா­டாகும் என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல கூறும்போது,

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்றார்.

உள்­ளூ­ராட்சி மன்ற எல்லை நிர்­ணயம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­போரே வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். இந்­நி­லையில் அர­சாங்­கமே வழக்கு தாக்கல் செய்து விட்டு தற்­போது நீதி­மன்ற தீர்ப்பை எடுத்து காட்ட முடி­யாது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க குறிப்­பிட்டார்.

இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறு­கையில்,

தயவு செய்து இந்த விவ­கா­ரத்தை இன்றும் (நேற்று) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். இன்று (நேற்று) மாலை கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.இதன்போது இதைப் பற்றி பேசுவோம் என் றார்.

Leave a comment