அல்கொய்தா தீவிரவாத இயக்கம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக ஏசியன் ஏஜ் ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் அல்-கைதாவும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அல்கொய்தா இயக்கமானது தனது பிரச்சார நடவடிக்கைகளை தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த அமைப்பின் ஊடக வலையமைப்பானது, அந்த இயக்கத்துக்குரிய காணொளிகள், கட்டுரைகள், செய்திகளை பிராந்திய மொழியில் மொழிபெயர்ப்புச் செய்வதற்கு ஆட்களை பணிக்கமர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அல்-கைதா அமைப்பு தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவத இதுலே முதன்முறை எனவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் அன்சார் மற்றும் உலிவின் சரத்து எனும் வலைத்தளங்கள் இளைஞர்களை இலக்குவைத்துச் செயற்படுவதாகவும், சமூக ஊடக வலையமைப்புக்களின் ஊடாகவும் பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியக் கண்கள் ஊடாக சிரியா என்ற முகப்புத்தக தளத்தினூடாக தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியான பதிவேற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.