முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான நாட்காட்டி வழக்கை விசாரணைக்கு எடுப்பதை தடுக்கும் வகையில் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேல்நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் வேறொரு நீதபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு கோரி பஷில் ராஜபக்ஷ் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் , குறித்த மனு இன்று ஆராயப்பட்ட போது இந்த தடையுத்தரவு வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திலிருந்து 2 கோடியே 94 இலட்சம் செலவீட்டில் முன்னாள் ஜனாதிபதியின் படத்துடன் கூடிய நாட்காட்டி அச்சிடல் சம்பவம் தொடர்பில் இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.