புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் புதிய சூத்திரத்திற்கமைய வருமான வரி தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மாத்தறையில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சாதாரண மக்களுக்கு வரிச்சுமையை அதிகரிப்பதை காட்டிலும், அனைவருக்கும் சமமான முறையில் வரி அறவீட்டினை மேற்கொள்ள இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.