எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போது வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக 05 ஆண்டு திட்டம் ஒன்றை வகுக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கூறியுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அந்த அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமன் சேனாதீர கூறினார்.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து 05 ஆண்டு திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனர்த்த நிலமையின் போது கட்டாயமாக செயற்பட வேண்டிய முறை சம்பந்தமான பரிந்துரைகளை உள்ளடக்கியதாக அந்த திட்டம் உருவாக்கப்பட உள்ளதாக சமன் சேனாதீர மேலும் கூறினார்.