தேங்காய்காக கட்டுப்பாட்டு விலை ஒன்றை நிர்ணயிப்பது குறித்து தற்போது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக அண்மையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு குழு கூட்டத்தின் போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி தேங்காய்காக 75 ரூபாவை அதிகபட்ச சில்லறை விலையாக நிர்ணயிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் வாரத்தில் தேங்காய்காக கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படலாம் என்று வாழ்க்கைச் செலவு குழு உறுப்பினர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார்.
தேங்காய் ஒன்று தற்போது 100 ரூபா முதல் 110 ரூபா வரை சந்தையில் விற்பனையாவதுடன், தேங்காயின் அளவுக்கு ஏற்ப அதன் விலை சில பிரதேசங்களில் மாறுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.