தேச விடுதலைக்காய் உலகம் வியக்கும் சாதனைகளை தேசியத்தலைவனின் கீழ் நிகழ்த்தி புதிய புறநானூற்று புலிகளாய் வராலாற்று தாயின் மடி உறங்கும் மாவீரச்செல்வங்களை ஈன்றவர்களையும் அவர்களோடு கூடப்பிறந்த உறவுகளையும்
மதிப்பளிப்பு இன்று பிரித்தானியாவில் மூன்று இடங்களில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடை பெற்றது.
மண்ணுக்காகவும் மக்களுக்காவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை வணங்கிப் போற்றும் அதே வேளை அவர்களைப் பெற்றெடுத்தவர்ளையும் உடன் பிறப்புகளையும் போற்றி மதிப்பளிக்கும் வைபவம் தமிழீழத் தேசியத் தலைவரால் ஆரம்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து புலம்பெயர் நாடுகளிலும்ஒவ்வொரு வருடமும் மாவீரர் வார தொடக்கத்தில் இடம் பெற்று வரும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வுதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுஉணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அதே போல் இம்முறையும்பிரித்தானியாவில் 21.11.2017மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிவரை St.Boniface, 185 Mitcham Road, Tooting SW17 9PG என்ற முகவரியில் மிகவும் சிறப்பாகவும்எழுச்சியாகவும்நடை பெற்றது. வழமைக்கு மாறாக பெருந் தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் பிரித்தானியா கொடியேற்றல்,தமிழீழ தேசியக்கொடியேற்றல் நடைபெற்றது.தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு பிராந்திய பொறுப்பாளர் வசந்தன் அவர்கள் ஏற்றி வைத்தார் தொடர்ந்து அகவணக்கம்,மலர்வணக்கம்,சுடர்வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது .தொடர்ந்து மாவீரர் பாடல்களும் இசைக்கப்பட்டு இறுதி நிகழ்வாக இருகொடிகள் கையேந்தப்பட்டு உறுதி மொழியுடன் நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது .