துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் மொஹமது பின் ரஷித் மக்தூமுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
துபாய் மன்னர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் மொஹமது பின் ரஷித் மக்தூமுக்கு ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி குறைந்த நாடுகளில் துபாய் ஷேக் மொஹமது பின் மக்தூம் முன்னெடுத்த மனிதாபிமான சேவைகளுக்காக அவரை கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற விருது வழங்கும் விழா அமிரக அரண்மனை ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில் அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ராணுவ துணை தளபதியுமான ஷேக் மொஹமத் பின் ஜாயித் அல் நஹ்யான் இந்த ஆர்டர் ஆஃப் மதர் ஆஃப் தி நேஷன் விருதை துபாய் மன்னர் ஷேக் முஹம்மத் பின் மக்தூமுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் போது ஷேய்கா ஃபாத்திமா பின்ட் முபாரக் விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேசிய மன்னர் ஷேக் மொஹமது, இந்த விருதை பெறுவதில் பெருமையடைவதாக கூறினார். இதன் மூலம் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களால் நிறுவப்பட்ட மதிப்புகள் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் ஷேய்கா ஃபாத்திமா பின்ட் முபாரக் மக்கள் நலத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள பெண் தலைவர்களுக்கு ஒரு முன் உதாரணம் எனவும், அவரது முயற்சிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்கள் நல்வாழ்வை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.