தமிழ் அரசியல் அரங்கில் ”புதிய கூட்டணி ” ஒன்று உருவாக்கிவிட்டது . அதாவது அதற்கான அடித்தளம் இடப்பட்டு உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக புதிய கூட்டணி தயாராக உள்ளது.
பிரதான கட்சிகளான தமிழ்தேசிய மக்கள் முன்னணியும் ,ஈழ மக்கள் புரட்சிக முன்னணியும் புதிய கூட்டணியில் கைகோர்த்துக்கொள்கின்றன. இவற்றுடன் சில பொது அமைப்புகளும் இணைந்து கொண்டுள்ளன.
தமிழ் தேசிய அரசியலில் பாரிய வெற்றிடம் உள்ள நிலையில் மாற்றுத்தலைமை ஒன்றின் தேவை அவசியமானது. அதே நேரம் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசிய அரசியலுக்கானதே தமது பணி எனக் கூறிக்கொள்வது தான் வேடிக்கையான விடயமே!
“தமிழ் இனத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தவர்களுடன் இணைந்து நேர்மையாக அரசியல் செய்ய முடியாது . மோசமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக புதிய கூட்டணி” என்கின்றார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஏலவே, சம்பந்தன் தலைமையிலான தமிழ் இன துரோக அரசியல்வாதிகளுடன் பணியாற்ற முடியாது என வெளியேறியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்ககாலத்தில் இருந்தே கூட்டமைப்புடன் இணைந்து பயணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, கூட்டமைபின் தலைமை கட்சியாக செயற்படும் தமிழரசுக் கட்சியின் ஏகபோக தன்மையை கண்டித்தும் தமிழ்மக்களை ஏமாற்றும் தன்மையிலும் அதிதிருப்தி ஏற்பட்டு கூட்மைப்பை விட்டு வெளியேறியுள்ளது.
“தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தற்போது சரியான தலைமைத்துவத்துடன் ஒரு புதிய அணி காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.” என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
புதிய அரசியல் அமைப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கி தமிழ் இனம் என்றுமே எழுந்து கொள்ள முடியாத அளவிற்குவிற்கான சதியை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்கியது . இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மட்டும் ஆதரவளிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியமைக்கு காரணம் தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நடைபெற்ற இரகசிய சந்திப்பிற்பே ஆகும்.
வரவு செலவுத் திட்டத்தி ற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அபிவிருத்தி வேலைத்திட்டம் என்னும் பெயரில் இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்நிதியை சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொள்ளவில்லையென்பதும் கவனிக்கதக்கது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் இப் புதிய கூட்டணியின் தேவை அவசியமானது. மேலும் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
எனவே, இப்புதிய கூட்டணியும் ஈழ விடுதலைதலையை தன் உயிர்மூச்சாக கொண்ட குடும்ப பின்னணியில் இருந்து இறுதி யுத்தத்தின் சாட்சியாக உள்ள பெண்மணி மகளிர் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, புதிய கூட்டணி புதிய பலத்துடன் வரவுள்ளது. இப் புதிய கட்சி “அனைத்து ஈழத் தமிழர் முன்னணி” என்னும் பெயரில் தமிழ் அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. இது தமிழ் தேசிய அரசியலில் ஒரு மைக் கல்லாக அமையும்.
வாழ்க! வளர்க!