ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான வன்முறை ஓர் “இன அழிப்பு” – அமெரிக்கா

413 0

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் ஓர் “இன அழிப்பு” என ஐக்கிய அமெரிக்க பிரகடனம் செய்துள்ளது.

ரோஹிங்கிய மக்கள் மியன்மாரின் இராணுவத்தினரால் தாங்கமுடியாத துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரோஹிங்கிய கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளை தூண்டுவதாக இராணுவத்தினர் குற்றம் சுமத்தியிருந்தாலும், இராணுவத்தினரின் கொடூரமான தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு ராக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெறுவது ரோஹிங்கியர்களுக்கு எதிரான இன அழிப்பு என கிடைக்கப்பெறும் தகவல்களை கவனமாவும் முழுமையாகவும் ஆராய்ந்ததன் பின்னர் ஐக்கிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஓர் அறிக்கை ஒன்றின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அட்டூழியங்களை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவ்வறிக்கையில் இது தொடர்பில் முழுமையான விசாரணை தேவை எனவும் பொறுப்பானவர்களுக்கு எதிராக தடைகள் மேற்கொள்வது தொடர்பில் கருத்தில் கொள்ளப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் இராணுவத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கடப்படும் வன்முறைகள் காரணமாக ராக்கெய்ன் மாநில ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சுமார் 600,000 பேர் பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment