சட்ட ரீதியாக தடைகள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிடுமாறு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பிழையான வர்த்தமானி மற்றும் சட்டத் தீர்ப்புகளை கொண்டிராத உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானியை உடனடியாக வெளியிடுமாறு அவர்இதன்போது கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.