ஹெம்மாதகம – மாவனல்லை வீதியின் அல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய பாதை ஒன்றிலிருந்து பிரதான பாதைக்கு பிரவேசிக்க முயற்சித்த வேளையில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவனல்லை பகுதியிலிருந்து வந்த முச்சக்கர வண்டி ஒன்றுடன் குறித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதுடன் முச்சக்கர வண்டியில் வந்த மூவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹெம்மாதகமை மற்றும் மாவனல்லை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்