தங்க பிஸ்கட்டுகளை கடத்தியவர் கைது.!

305 0

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 4 தங்ககட்டிகளை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 12.10 மணியளவில் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் தமது உடலில் தங்கக்கட்டிகளை மறைத்து எடுத்த செல்ல முற்பட்டுள்ள நிலையில் சுங்கப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 71 கிராம் நிறையுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றின் பெறுமதி  3 இலட்சத்து 55 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடையவர் என்பதுடன் அவர் இந்திய பிரஜை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள் சுங்கப்பிரிவினரால்  அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 10 ஆயிரம் ‌‌ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment