இந்த உத்தியோபூர்வமான சந்திப்பு இன்று காலை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் விமானப்படைத் தலைமையத்திற்கு சென்ற கடற்படைத் தளபதிக்கு கொரவமும் மரியாதை வழங்கப்பட்டதுடன் விமானப்படைத் தளபதி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து, இடம்பெற்ற உயர்மட்டத்திலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இந்நிகழ்வில் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் பரஸ்பரம் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.