தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயரினை மீண்டும் போடுமாறு கோரி கடந்த காலங்களில் மலையகத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் நுவரெலியா – அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் 125 இற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் கடந்த சில வாரங்களுக்கு முன் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதனை மீண்டும் தொண்டமான் என்ற பெயரை சூட்டக்கோரியே தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமானின் படங்களை ஏந்தியவாறு, தொண்டமான் பெயரினை மீண்டும் சூட்டுமாறு கோஷமிட்டனர். அதனை தொடர்ந்து தோட்டத்தில் பேரணி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.