உள்ளூராட்சிகள் மற்றும் மாகாணசபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சபாநாயகரிடம் சற்றுமுன்னர் கையளித்துள்ளது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.