சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட்டில் இதுவரை 53 பேர் நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இதற்கிடையே, ஒடிசாவை சேர்ந்த சத்ருகன புஜாரி சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிறப்பித்தனர்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதி சத்ருகன புஜாரிக்கு இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவரது நியமனத்தை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. நீதிபதிகளின் காலியிடம் 21 ஆக குறைந்துள்ளது.
சத்ருகன புஜாரி ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் ஐகோர்ட் நீதிபதியாக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.