தப்பியோடிய 26,000 இராணுவத்திரை பிடிக்க நடவடிக்கை

293 0

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் என இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய வீரர்களுக்குச் சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் நேற்றைய தினம் நிறைவடைந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட குறித்த பொது மன்னிப்பு காலப்பகுதியில் 11,232 உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் பேரில் விலகியுள்ளதாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அதில் 15 இராணுவ அதிகாரிகளும் 9 கெடட் அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இதேவேளை இராணுவத்திலிருந்து தப்பியோடிய மேலும் 26,000 பேர் காணப்படுவதாகவும் அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment