போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் இன்று காலை 07.00 மணி முதல், 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.