தீங்கிளைக்கும் மதுபானங்களுக்கு மாற்றீடாக கித்துள் கள்லை பயன்படுத்தும் வகையில் மானியங்களை வழங்குமாறு, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
கித்துள் கள் நோய்களில் இருந்து பாதுகாக்கக் கூடிய தன்மை கொண்ட பானம் என குறிப்பட்டுள்ள அவர், மூதாதையர்கள் இதனைப் பருகியமையால் 100க்கும் மேற்பட்ட வருடங்கள் ஆயுளைக் கொண்டிருந்ததாகவும் சாமர சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பியருக்கு அரசு வரிச் சலுகை அளித்துள்ளது எனவும், கித்துள் கள்ளுக்கும் இதுபோன்று சலுகைகள் பெற்றுக் கொடுத்து அதனை பிரபலமாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.