மக்கள் பிரதிநிதிகளை தீர்மானிக்கும்போது அவர்களது கல்வித் தகைமை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
அரசியல் வாதிகளுக்கென தனியான ஒழுக்க சட்ட விதிமுறைகள் உருவாக்க பட வேண்டும்.
இலங்கை கல்வி ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடாகும்.
எனினும் பிரதேச சபை மட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் வாதிகளின் கல்வி தகைமை நிலைகளில் இலங்கை அவதானம் செலுத்துவதில்லை.
அத்துடன் நட்டில் நிலவும் இன அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அரசியல் அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் மாத்திரம் போதாது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மக்கள் சிந்தனைகளில் மாற்றங்கள் தேவை.
நாட்டில் அனைத்து மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்படவேண்டும் என்ற கருத்து வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு இதுவரை வழங்கப்படாத, அவர்களது உரிமைகள் இருப்பின் அவற்றை வழங்க வேண்டும்.
அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாயின் நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரணதுங்க குறிப்பிட்டார்.