உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிக்கையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது குறித்து இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படவுள்ளது.
கடந்த 16ம் திகதி குறித்த மனு பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த மனுவை தள்ளிபடி செய்யுமாறு கோரியிருந்தார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.