சட்டம் மற்றும் அமைதியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த முடியாத பொலிஸ் மா அதிபர் அரசியல் குறித்து கருத்து வௌியிடுவது, ஏற்றுக் கொள்ள முடியாதது என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
காலி – கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை பாடமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என, பூஜித்த ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.
மேலும், அதிகாரப் பசியுடைய சில இனவாத அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுக்களின் தேவைக்கு ஏற்ப, இனவாதம் அல்லது தீவிரவாதத்திற்கு தள்ளப்படுவது குறித்து ஆராய வேண்டும் எனவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.