தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தமிழ் பேசுகின்றவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கான பொதுவான பிரச்சினைகளைத் தட்டிக்கேட்கின்ற தைரியத்துடன் முன் செல்லவேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழரசுகட்சியின் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே ப.சத்தியலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:
கடந்த காலத்தில் இடம்பெற்ற கசப்பான விடயங்களை மறந்து வவுனியாவில் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களின் நல்லுறவைக் கட்டியெழுப்பவேண்டும்.
இன்றைய இந்தக் கலந்துரையாடலை மேற்கொள்ளவிடமால் பலர் தடுக்கின்ற னர் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாணசபையின் தேர்தலின்போது எனக்கு மூவின மக்களினுடைய வாக்குகளும் கிடைத்தன.
எனது வெற்றிக்காக முஸ்லிம் நண்பர்கள் பலர் என்னுடன் வீடு வீடாக நடந்து திரிந்துள்ளனர். சிறுபான்மை இனத்தவர்கள் என்ற ரீதியில் எங்களுக்குப் பொதுவான பல பிரச்சினைகள் உள்ளன. பொதுவான தேவைகள் நிறைய இருக்கின்றன.
கொக்கிளாய் வயல்காணி விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி நாங்கள் ஒன்றாக நின்றால் எங்களுக்கிடையே இருக்கின்ற புரிந்துணர்வு நாள்பட நாள்படச் செறிவாகும்.
தமிழரசுக்கட்சியுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சகோதரர்கள் பலர் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்றைய கலந்துரையாடல் ஆணித்தரமான சில கருத்துக்களை எடுக்கின்ற, தமிழ்பேசுகின்ற மக்களாக நாங்கள் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தயார்ப்படுத்துகின்ற கூட்டமாகவும் இது இருக்கும் என நம்புகின்றேன்.- என்றார்.