தமிழர் ஒருவர் நாட்டை ஆட்சிசெய்திருந் தால் இந்தளவுக்கு முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆபத்துக்களை மக்கள் எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் . இரண்டு மணித்தியாலத் தில் நாட்டை இரத்த பூமியாக மாற்றும் அளவிற்கு முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பான தகவல்கள் எம்மிடம் உள்ளன என்று பொதுபலசேனா அறிவித்துள்ளது.
முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்புகள் நாட்டில் தீவிரமடைந்துள்ளன. கிந்தோட்டை போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே உடனடியாக சர்வகட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்படைவாத பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரிய – நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேன அலுவல கத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில் ,
பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை பல முறை வெளிப்படுத்திய போதிலும் உரிய வகையில் நடவடிக்கைகள் எந்தவொரு அரச தலைவரினாலும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் அடிப்படைவாதத்தின் பின்னணியில் உள்ள அரசியல் நிழல்களை நாம் அறிவோம். வன்முறைகள் பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையாது என்ற நிலைப்பாட்டில் பொதுபல சேனா செயற்படுகின்றது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களா? அங்கு விபத்துக்கள் இடம்பெற கூடாதா ? அவ்வாறு விபத்துக்கள் இடம்பெற்றால் முஸ்லிம்களுக்கு தாக்குவதற்கு என்ன உரிமையுள்ளது. கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற சாதாரண விபத்தை வன்முறையாக்கியது யார் ? என்ற உண்மை கண்டறியப்பட வேண்டும். மாளிகாவத்தை, அக்குரண மற்றும் தர்கா நகர் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் போன்று காணப்படுவதை ஏற்க முடியாது.
மாணிகக்கல் வியாபாரிகள் அதிகம் கூடும் இடமாக காணப்படும் கிநதோட்டையில் சிறு சிறு குழுக்களாக வீதி ஓரங்களில் வியாபாரிகள் நிற்பார்கள். அதே போன்று வீதி ஓரங்களில் சிறிய கடைகளையும் வைத்திருப்பார்கள். மேலும் எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் வாகனங்களை நிறுத்த கூடாது என பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளன . நாட்டில் உள்ள சட்ட ஒழுங்கு அமைச்சிக்கோ பொலிஸாருக்கோ இந்த விடயங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
வாகன போக்குவரத்திற்கு பெரிதும் பாதிப்பாக காணப்படும் இவ்வாறான இடங்களில் விபத்துக்கள் இடம்பெறுவது பொதுவான விடயமாகும். கிந்தோட்டை விபத்தும் இவ்வாறானதொரு சாதாரண விபத்தாகும். பாரிய உயிர் சேதம் ஏற்படுத்தும் ஒன்றாக அது அமையவில்லை. ஆனால் விபத்து ஏற்படுத்திய இளைஞர்களை வீதிகளில் கூடியிருந்த குழுவினர் தாக்கியது எவ்விதத்தில் நியாயமாகும். பௌத்த மக்கள் மிகவும் பொறுமையானவர்கள். அலவ்வ பகுதியில் இடம்பெற்ற சிறிய விபத்தை காரணம் காட்டி சம்மந்தப்பட்ட இளைஞனை பள்ளிவாசலுக்குள் அழைத்து சென்று ஷரியா சட்டத்தில் தண்டித்துள்ளனர்.
அடிப்படைவாதிகளின் இவ்வாறான விடயங்கள் அறிந்தும் பொறுமை காத்து வருகின்றோம். கிந்தோட்டை போன்ற சம்பவங்கள் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் நடக்கலாம். பயங்கரவாதத்திற்கு சாயலான அடிப்படைவாத்தினால் நாடு பேராபத்தில் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறுகிய அரசியல் நலன்களை கொண்டு சிந்திக்காமல் இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.
முஸ்லிம் அடிப்படைவாதத்தின் ஆக்கிரமிப்புகள் நாட்டில் தீவிரமடைந்துள்ளன. உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. முஜுபுர் ரஹுமான் மற்றும் ரிஷாட் பதியுதீன் போன்றவர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். நல்லாட்சி பொருளிழந்து செயற்பட கூடாது. அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் எமது கலாசார பாரம்பரியங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆக்கிரமிப்புகள் அடிப்படைவாதிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் வெளிப்பாடுகளாக பல்வேறு சம்பவங்களும் ஆதாரங்களையும் எம்மால் கூற முடியும். திருடர்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருப்பார்கள். அதே போன்று முஸ்லிம் அடிப்படைவாதிகளும் சிறிய விடயத்தை பெரிதாக்கி தம்மை பாதுகாத்து கொள்வதற்காக சமூக வலையத்தளங்களில் பௌத்த மக்களுக்கு எதிரான பிரசாரங்களை செய்கின்றனர். ஆனால் தேர்தலில் வாக்குகள் குறைந்து விட கூடாது என்பதற்காக எமது அரசியல் தலைவர்கள் வெட்கிக்கும் வகையில் வேடிக்கை பார்க்கின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் அடிப்படைவாத்தில் இருந்து வெ ளிவர முடியவில்லை. புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேசுபவர்கள் அதில் ஷரியா சட்டம் , பர்தா விவகாரம் மற்றும் ஹலால் உள்ளிட்டவை ஒழிக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை. உள்ளடக்கவில்லை. எமது தலைவர்களின் செயற்பாடுகள் மிகவும் இழிவாக உள்ளன. ஒரு தமிழன் நாட்டை ஆண்டிருந்தால் நிச்சயமாக இவ்வாறன அடிப்படைவாதத்திற்கு இடமளிக்காது பௌத்த மக்களை சிறந்த வகையில் பாதுகாத்திருப்பார்.
எல்லை நிர்ணய பணிகளை முஸ்லிம் ஒருவருக்கு கொடுத்துள்ளனர். எல்லை நிர்ணயம் எவ்வாறு காணப்படும் என்று சிந்தித்து பாருங்கள் . ஆகவே வேடிக்கை பார்த்தது போதும். உடனடியாக சர்வகட்சி குழுவை கூட்டி முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாட வேண்டும். போதுமான ஆதாரங்கள் பொதுபல சேனா வசம் உள்ளன.
எனவே பாரிய பிரச்சினைக்கு வழிவகுக்காமல் உடனடியாக பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லை என்றால் பெரும் வன்முறை தலைத்தூக்கும் நிலை ஏற்படலாம் என்றார்.