மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க வேண்டும் : 27 ஆம் திகதி எழுச்சி நாள்!

316 0

இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் சுதந்­தி­ரத்தை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­ற­மை­யா­லேயே இன்று வரை தமி­ழர்கள் பல இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­வ­தாக தெரி­வித்­துள்ள வடக்­கு­மா­காண சபை உறுப்­பினம் எம்.கே.சிவா­ஜி­லிங்கம் எதிர்­வரும் 27ஆம் திகதி வரை மாவீரர் வார­மா­கவும் 27ஆம் திக­தியை தேசிய எழுச்சி நாளா­கவும் அனுஷ்­டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

யாழ்.ஊடக அமை­யத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை பிற்­பகல் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இதனை தெரி­வித்­தி­ருந்தார். இங்கு அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது ,

இலங்­கையை இறு­தி­யாக ஆண்ட ஆங்­கி­லே­யர்கள் நாட்­டுக்கு சுதந்­திரம் கொடுத்­து­விட்டு செல்லும் போது அதனை சிங்­க­ள­வர்­க­ளிடம் மாத்­திரம் கொடுத்­து­விட்டு சென்­று­விட்­டார்கள். அதனால் தான் இன்று வரை தமிழ் இன­மா­னது பல இன்­னல்­களை அனு­ப­வித்து வரு­கின்­றது.

இத்­த­கைய இன்­னல்கள் தொடர்ந்தன் கார­ண­மா­கவே தமிழ் இளை­ஞர்கள் ஆயு­த­வழிப் போராட்­டத்தின் மூலம் தமிழ் இனத்­திற்கு சுதந்­தி­ரத்தை பெற்­றுக்­கொ­டுக்க முற்­பட்­டார்கள். ஆனாலும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி ஆயுதப் போராட்­ட­மா­னது மௌனித்­தி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் எமது சுதந்­தி­ரத்­தி­ற­காக போரா­டிய வீரர்­க­ளுக்­காக 1982ஆம் ஆண்டு கார்த்­திகை மாதம் 27ஆம் திகதி முத­லா­வது மாவீரர் மர­ண­ம­டைந்த தினத்தை மாவீரர் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி அனுஸ்­டித்து வரு­கின்­றார்கள். அந்­த­வ­கையில் இந்த வரு­டமும் அந் நாளை தேசிய எழுச்சி நாளாக அனுஸ்­டிக்க வேண்டும்.

நாம் ஒவ்­வொ­ரு­வரும் ஒவ்­வொரு தீபத்தை ஏற்றி அந்­நாளை உணர்­வெ­ழுச்­சி­யுடன் அனுஸ்­டிக்க வேண்டும். அவ்­வாறு செய்வதனூடாகவே நாம் இன்னமும் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இனம் என்ற செய்தியை சர்வதேசத்திற்கும் அரசுக்கும் கூறமுடியும் என தெரிவித்தார்.

Leave a comment