பெரும் போராட்டங்களின் பின்னர் மீள்குடியமர்த்தப்பட்ட கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களில் 41 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த வீடுக ளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளது. பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை இராணுவத்திடம் இருந்து போராடிப் பெற்றிருந்தனர்.
ஆனால் அவர்களது காணிகளில் அவர்களுக்கென்று வீடுகள் உடனே வழங்கப்படவில்லை.
தறப்பாள் கொட்டகை களில் வாழ்வதாகத் தெரிவித்துத் தமக்கு வீடுகள் அமைத்துத் தருமாறும் கோரியிருந்தனர்.
இந்த விடயம் அண்மையில் இடம்பெற்ற முல்லைத் தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிலக்குடியிருப்பு சார்பாகக் கலந்துகொண்ட மக்கள் பிரதி நிதிகள் கருத்துக்களைப் பகிர்ந்தனர். விடயம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
‘‘மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேச மக்களுக்கென இராணுவத்தினரால் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. வீடுகள் அரச செலவில் அமைக்கப்பட்டன.
அதனால் குறித்த பிரதேச மக்களுக்கு மீண்டும் புதிதாக வீடுகளை வழங்க முடியாத நிலை உள்ளது’’ என்று மாவட்டச் செயலர் தெரிவித்தார்.