அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் 2020ம் ஆண்டில் 50,000 வரை பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் க்ரேரு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாத அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடம் பல்கலைக்கழக அனுமதி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் பாரிய வெற்றி எனவும், அரச பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது