2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்தபின்பு, தமிழீழ விடுதலைப்புலிகளின் படகுத் தெரிழநுட்பத்தை பெருந்தொகைப் பணம் கொடுத்து ஈரான் நாடு பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதனை ஈரானுக்கு அப்போதைய பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் பயன்படுபடுத்தப்படும் தந்திரோபாயங்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளால் கண்காணிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், விடுதலைப்புலிகளில் சொந்த முயற்சியிலும் தொழில் நுட்ப அறிவினாலும் உருவாக்கப்பட்ட சண்டைப்படகுகளின் தொழில் நுட்பம் யுக்தி போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசு பெரும் அளவிலான சண்டைப்படகுகளை உற்பத்தி செய்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட படகுகள்,
அனைத்து காலநிலைக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியது, கனரக ஆயுதங்கள், எரிபொருள் கலன்கள், ஆயுதங்களுக்கான ரவைகள் என பெரும் சுமைகளை ஏற்றியவாறு அதி கூடிய வேகத்தில் பயணிக்க கூடிய அமைப்பைக் கொண்டுள்ளது.
சண்டைகளின் போது வேகமாகவும் அதேநேரம் சடுதியாக திரும்பக்கூடியவாறு அடிப்பகுதி அமைக்கப்பட்டிருந்தமை.
குறைந்த உற்பத்திச்செலவு, போன்ற சிறப்பம்சங்கள் காரணமாகவே இத்தகைய தொழில் நுட்பம் இலங்கை இராணுவத்தின் படகுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இத்தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி சிறீலங்கா கடற்படையினர் படகுகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது.