பொலிஸ் அதிகாரி தற்கொலை : உயிரிழந்த அதிகாரிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று

313 0

முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று காலை முல்லேரியா பொலிஸ் நிலையத்தின் பரிசோதகர் பிரிவு அதிகாரிகளின் வதிவிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய பிரேமசிறி என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அடிப்படை உரிமை வழக்கு விசாரணையின் இறுதித்தீர்ப்பு இன்று வழங்கப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment