போலி வைத்தியர்கள் பற்றி புகார் செய்ய தொலைபேசி எண்கள்

317 0

201608271204401236_Phone-numbers-to-complain-about-fake-doctors_SECVPFவைத்தியர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி வைத்தியர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கூறி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலை தடுக்கவும், போலி டாக்டர்களை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மோகனனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

காய்ச்சல் குறித்து பொது மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளது.

போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். நோயின் தன்மை தெரியாமல் அவர்கள் அளிக்கும் சிகிச்சையால் காய்ச்சலின் தாக்கம் அதிகரிக்கும்.

மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக தனித்தனி குழு அமைத்துள்ளோம். அனைத்து ஆஸ்பத்திரியிலும் அவர்கள் சோதனை நடத்துவார்கள்.

டாக்டர்களின் சிகிச்சை முறையில் சந்தேகமோ அல்லது போலி டாக்டர்கள் என்று தெரிந்தாலோ பொதுமக்கள் 94441 32000, 94449 82684 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் டாக்டர்களின் ஆலோசனை இன்றி காய்ச்சலுக்கு நேரடியாக கடைகளில் மாத்திரைகளை வாங்கி பொதுமக்கள் பயன் படுத்த வேண்டாம். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.