வெளிநாட்டு வெடிபொருட்களுடன் ஒருவர் கைது

335 0

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட வெடிபொருட்களை சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்திருந்த நபர் ஒருவர் தலங்கமை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட்ட வேளையில் செயலிழக்கச் செய்யப்படாத கைக்குண்டு ஒன்று, 4 துப்பாக்கி குண்டுகள், விளையாட்டு துப்பாக்கிகள் மேலும் பல துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தலங்கம வடக்கு பத்தரமுல்லை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment