உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜ.ம.கா போட்டியிடும்

325 0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட தீர்மானித்துள்ளது. 

முன்னாள் பிரதியமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலேயே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய, கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகரசபை, வவுனியா முல்லைதீவு மாவட்டங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பணியை விரும்பும் பெண்கள், வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் அத்துடன், எவரேனும் வேட்பாளராக முன்வர விரும்புபவர்கள் தலைமைச் செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொது செயலாளர் கலாநிதி என். குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

Leave a comment