சாலையில் தரையிறங்கிய சிறிய விமானம் – எஞ்சின் கோளாறால் மரத்தில் மோதி நொறுங்கியது

337 0

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீட்டிற்கு மிக அருகில் சிறிய விமானம் பறந்து சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் ஒரு பயணியுடன் விமானம் கிளம்பியது. விமானம் தரையிரங்குவதற்கு 2 கிலோ மீட்டருக்கு முன் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டது. அதனால் விமானத்தை பாதியிலேயே தரையிறக்க முயற்சி செய்தனர்.

அப்போது விமானத்தின் இடது இறக்கையில் கோளாறு ஏற்பட்டது. விமானியின் கட்டுப்பாட்டை மீறி விமானமானது கீழே இறங்கியது. நெடுஞ்சாலையின் மிக குறைந்த தூரத்தில் பறந்த விமானம் சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால் விமானி மற்றும் பயணிக்கு காயம் ஏற்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் அவர்களை மீட்டனர். விமானம் வீட்டிற்கு மிக அருகில் பறந்ததால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. பயங்கர சத்ததுடன் விமானம் விழுந்ததாக அனைவரும் கூறினர்.

Leave a comment