ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை நேற்று சந்தித்து பேசிய புத்தமத துறவி தலாய் லாமா, அவரை பாராட்டி பேசினார்.
திபெத் நாட்டை சேர்ந்த புத்தமத துறவி தலாய் லாமா (82). இவர் இரண்டு நாள் பயணமாக நேற்று ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். அப்போது முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினார். அதன்பின்னர் தலாய் லாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டுக்காக நீண்ட நாட்களாக உழைத்து வரும் முதல் மந்திரிகளில் நவீன் பட்நாயக்கும் ஒருவர். ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே போல் அல்லாமல், நவீன் பட்நாயக் தேர்தல் முறையில் ஆட்சியை பிடித்துள்ளார். மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் மரியாதையை அவர் காப்பாற்றி வருகிறார். எனவே நானும் அவரை பாராட்டி பேசினேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நவீன் பட்நாயக் கூறுகையில், தலாய் லாமாவின் பாராட்டு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிரது. தலாய் லாமாவின் ஒடிசா பயணத்தை நான் வரவேற்கிறேன். மாநிலத்தின் முதல் மந்திரியாக அவரை இரண்டாவது முறையாக சந்தித்துள்ளேன் என்றார்.