சசிகலா சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

395 0

சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலா, தினகரன் குடும்பத்தினர் சந்தர்ப்பவாதத்தின் ஒட்டுமொத்த உருவங்கள். அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தமிழ்நாட்டை சூறையாடி வளைத்துப் போட்டவர்கள்.

தினகரன், திவாகரனுக்கு நயவஞ்சகத்தனமான நாக்கு. அம்மா, சசிகலாவை பாதுகாப்பு இல்லாமல் விட்டு விட்டார் என்று திவாகரன் கூறுகிறார். அவர் எந்த தகுதியும் இல்லாதவர்.

தினகரன், அம்மாவை ஏ ஒன் என்று கூறுகிறார். அவருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். இவர்களை வரலாறு மன்னிக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment