தென் ஆப்ரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல் – உரிய விசாரணை கோரும் இந்தியா

433 0

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரக உயரதிகாரி சஷாங் விக்ரம், அங்குள்ள வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரியுள்ளது.

தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில் இந்திய தூதரகம் உள்ளது. இதில், சஷாங் மனோகர் என்பவர் தூதரக அதிகாரியாக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், நேற்று மனோகர், அவரது ஐந்து வயது மகன், பணியாளர் மற்றும் மகனின் ஆசிரியர் ஆகிய நான்கு பேரை அங்குள்ள வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கியுள்ளது. மேலும், ஆயுத முனையில் நால்வரையும் சிறைபிடித்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து தென் ஆப்ரிக்க வெளியுறவு துறையிடம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பில் இந்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் இது தொடர்பாக சஷாங் மனோகரிடம் பேசியதாகவும், அவரது குடும்பத்தினர் நலன் குறித்து உறுதியளித்ததாகவும் ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

Leave a comment